நீ என்னுயிர்

நீ சிரிக்கும் சிரிப்புகள் அனைத்தையும் இசை அமைக்கிறேனடி! என் இருதயமெனும் இசை வீட்டில்!
நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடிகளையும் படங்களாக கோர்க்கிறேனடி! என் கண்களெனும் சிறையில்!
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குறிப்பெடுக்கிறேனடி! என் மனமெனும் பதிவேட்டில்!
நீ நீ எனும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நாம் நாம் என்றே உணர்கிறேனடி!-நீ நம் காதலை என்னிடம் சொல்லிய நொடியிலிருந்து என் உயிரே!