அக்கறை

அண்ணன் எப்போ சாவான்
திண்ணை எப்போ காலியாகும்
வாக்குக்குப் பொருளாய்
சிலதம்பிகள் வாழும் நாட்டிலே

அண்ணன் எப்போ வருவான்
என்னை கரை சேர்ப்பான்
என்று தங்கையவள்
வாய்திறந்து சொல்லாமலே

கேள்வி கேட்கும் பாஷையாலே
கடல்விட்டு ஊரு வந்தேன்
திருமணமும் செய்து வைத்தேன்
திருப்தியோடு திரும்பவும்நான்

கடல்கடந்து வந்துவிட்டேன்
நாட்டைவிட்டு ஊரைவிட்டு
வாங்கிப்போன கடனையெல்லாம்
வகைப் பிரிச்சு திருப்பித்தர

இளமைக்கும் வயசு
கூடி கூடிப் போயி
முப்பதுக்கும் மேல
மூணு கூடிப் போச்சு

இன்னும் ஏன் கல்யாணம்
செய்யாம இருக்குற
கேட்கும் வாய்கெல்லாம்
அகலச்சிரிப்பில் மௌனபதில்!

வரப்போகும் மனைவியின்
அண்ணன்மார்கள் யாரும்
கடன்படக் கூடாதென்று
ஆயத்தம் செய்கிறேன்
அக்கறையாய் நானே..!

என்று எழுதிக் கொண்டேன்
மௌனத்திற்கு கோனார் உரை
என் உள்ளத்தில் தானே!

எழுதியவர் : உமர் ஷெரிப் (17-Mar-14, 1:27 pm)
Tanglish : akkarai
பார்வை : 1030

மேலே