வானத்தைப் பார்த்து வேண்டுங்கள்

உலகம் யாவும் இம்மகளிர் தினத்தை
உவந்துக் கலந்துக் கொண்டாடிய வேளையில்
உம்பரம் தன்னில் உலவிய ஊர்தியோ
கம்பலம் கொண்டு காணாமல் போனது.

இரண்டு சிறுவரும் இரு்நூற்று முப்பத்து
ஒன்பது பேரும் என்னதான் ஆயினர்?
மிரண்ட விழியுடன் இருண்ட புவனம்
திரண்டே தேடுது திக்கெட்டும் ஓடுது.

தகவல் அளிக்கும் கணிணிப் பொறிகளும்
இகவாமை இல்லா மென்பொருள் இல்லென
உகப்பது குறைத்து உணராமை கூட்டி
உதயம் தன்னையும் உறங்கிட வைத்தது.

ஒன்பது நாட்களும் ஓடி முடிந்தபின்
ஒட்டார் என்பவர் ஓட்டுனர் என்றே
ஒப்பனைச் சொற்களை ஒருமையில் ஓதினர்
ஏதம் இதற்குமோர் விடியலே இல்லையோ?

ஆடிப் புலம்பி அலறித் தலைவிரித்து
ஓடித் திரியும் உறவு முறையினர் கூடி
்என்ன வகை என்றறிய மந்திர வாதி
தன்னையும் அழைத்துத் தேடுதல் முறையோ?

தீவிர வாதிகள் அதைத் தீயிலிட்டனரோ
ஈவிரக்கம் இல்லாமல் எல்லொருடன் சேர்ந்து
சீராட்டு தேடி சீயமாய் தனை நினைந்து
நீராழிதனில் புகுத்தி நீசரும் ஒழிந்தனரோ?

நல்ல மனதுடைய மக்கள் நாமெனில்
எல்லோரும் பிழைத்திட வழி பார்ப்போம்
சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு
அந்தகாரம் முடிந்திட வேண்டிக் கொள்வோம்

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (18-Mar-14, 4:13 pm)
பார்வை : 67

மேலே