காதல் கடிதம்

உன் விரல் அழுத்தி!
எண்ணத்தைச் செலுத்தி!
காகித முதுகினிலே!
முத்தாய்ச் சொல் பதித்தாய்!

காதல் கதை எழுதி !
கனி மொழி பல சொல்லி!
காவியம் படைக்க நல்ல!
கருவியாய் உனை நினைத்தாய்!

அன்பின் அடையாளமாய்!
இதயத்தை ஊடருவும்!
சின்னமொன்றைப் பதித்து!
காதல் வார்த்தை பொரித்து வைத்தாய்!

சொற்கள் பல கவிதையாக்கி!
ஏக்கமான வார்த்தை இட்டு!
கன்னி அவள் ஏக்கம் கொள்ள!
பன் பதங்கள் எழுதி வைத்தாய்!

கற்பனையில் பல நினைத்து!
சொல் லொப்பனைகள் பல செய்து!
காகிதத்தில் சொல் நிரப்பி!
மங்கையவள் கவரச் செய்தாய்!

காகிதங்கள் தூதாக்கி!
கதைகள் பல அதில் சொல்லி!
கை நடுக்கம் வரு முன்னே!
அவள் கரம் பெறச் செய்தாய்!.

கசங்கிய தாள்களுக்குள்!
முடிவுறாத சொல் வரிகள்!
மயக்கமான கருத்துரைகள்!
மூலையிலே குவித்து வைத்தாய்!

வார்த்தைகளை சுத்தமாக்கி!
வரிகள் பல முத்தாக்கி!
பார்த்தவுடன் காதல் கொள்ள!
சொல்லிலே செல்வன் ஆனாய்!

எழுதியவர் : ஜவ்ஹர் (18-Mar-14, 4:09 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 67

மேலே