குறும்புப் பா - 3

கணனிக்கும் கற்பூரம்
காட்டி கணக்குகள்
தயார் செய்கிறார்
லாபம் பெரிதாக
வரவேண்டுமென்று.

##################
வழக்கு வழக்கு
வலுக்கும்
வழுக்கும்
இழுக்கும்
ஏமாற்றுவோம்
ஏமாறுவோம்
இழப்போம்

##################

பட்டு சேலைகளோ
பல ஆயிரம் ரூபாய்கள்
பட்டு வேஷ்டிகளோ
பல நூறு ரூபாய்
முன்னுரிமை என்பது
இல்லையே என்கிறார்கள்
பெண்கள்

##################

அரங்கத்தில் ஏசி
போடப்பட்டது
கதவுகள் அடைக்கப்பட்டன
வந்த கூட்டமும்
போய்விடக்கூடாது என்று.

##################

எழுதியவர் : arsm1952 (18-Mar-14, 5:47 pm)
பார்வை : 479

மேலே