விளை நிலங்கள்
கரும்பும் நெல்லும் விளைந்த விளை நிலங்கள்
காணாமல் போகுது வீட்டு மனைகளாய்!
நீரைத் தேக்கி வைக்கும் நீர் நிலைகள்
பங்கு போடப்படுது மனைப் பட்டாக்களாய்!
விளைச்சல் மிகத் தந்த வீரியமிக்க பூமியோ
வீணாகிப் போகுது கழிவு நீரால்!
விவசாயம் செய்த விவசாயிக்கு இன்று
நிலமும் இல்லை பயிர் செய்ய பணமும் இல்லை!
தங்கத்தில் முதலீடு செய்யும் தனவான்கள் சிலர்-இத்
தொழிலில் முதலீடு செய்தால் என்ன?
இத்தரணியை வாழ வைக்க விழைந்தால் என்ன?
உழவரையும் உழவுத்தொழிலையும் காத்தால் என்ன?