ஆண் பாவம்

குறிப்பு:
மகளிர் தினத்தன்று
மகளிரின் பெருமைகளை
சாதனைகளை பெருமை படுத்துவர்!
மகளிர் தினத்தன்று
ஆண்களின் அங்கலாய்ப்பு
எங்கள் தினம் எப்போது ?
ஆண்களுக்காக ஒரு படைப்பு ..
வாக்குகளை பதித்து ஆண்களை அங்கீஹாரம்
செய்யுங்கள்!
பெண்ணை தன்னவளாக்க "தாலி" எனும்
அணிகலனை ஆண் சூட்டுகின்றான்!
சூட்டியது தான் தாமதம்
அணி அணியாய் நிபந்தனைகள் !
அச்சுறுத்தும் அவதாரங்கள் !
அன்றாடம் கேள்விக்கணைகள் !
அல்லலோடு அலுவலகத்திற்கு சென்று
அல்வாவோடு
ஊதியத்தை கொடுத்தாலும் துரும்பை
ஊதுவது போல் எங்களை ஊதுகின்றீர்களே ..
காவலனாய்
ஓட்டுநராய்
இல்லத்தரசனாய்
மாறு வேடங்களில் போட்டி இட்டாலும்
பரிசு பெற வாய்ப்பு இல்லையே !
உடுக்க உடை அவசியம் ஆனால்
ஊரில் உள்ள உடைகள் அனைத்தும்
உடைமையாக்க எண்ணுவது நியாயமா?
நாங்கள் கட்டியது பாசக்கயிறு
நீங்கள் கட்டுவதோ மூக்கன்னாங்கையிறு
வெள்ளையர்கள் போல்
சிறையில் அடைத்து எங்கள் எண்ணங்களின்
சுதந்திரத்தை பறிக்கிறீர்களே!
குடியரசு தினம் கொண்டாடி
வல்லரசர்களாய் நாங்கள்
வலம் வரும் நாள் எப்போது?
நகை சேர்க்க ஆசை
திரைப்படம் செல்ல ஆசை
உடை வாங்க ஆசை
உலா செல்லவும் ஆசை
எங்கள் மேல் ஆசை ??????????
பொறுப்புகளை
பொறுப்பாய் சுமப்பதில்லை என
பொறுப்பாய் குற்றம் கூறி
பொறுப்பில்லாமல் ஆசைகளை
அடுக்குகின்றீர்களே!
சமுதாயத்திற்காக
சலனமற்று வாழ்வை நடத்தி செல்கின்றோம் !
அகத்தில் அமைதி நிலவ
அகத்தை விட்டொழிப்போம்