தேவதாசி காரணமென்ன நீ யோசி
காமம் ஒன்றும் தப்பே இல்லை !
காகிதமெல்லாம் குப்பையுமல்ல!!
இச்சை கொள்ளா மனிதனுமில்லை
அச்சில் ஏறாது காகிதமல்ல..!!
ஓவியன் கையில் காகிதம்
தெய்வமாகி கருவறை செல்லும்!
கசங்கிய மனித எண்ணத்தாலே
காகிதம் குப்பையாகும்!
வாயிலில் தவி(ர்)க்கும் காலனி
கண்ணில் ஒற்றுவான் தைக்கும் தொழிலாளி!
பூக்கும் பூவெல்லாம் பூஜைக்காக மட்டுமல்ல
கல்லறையிலும் உயிர்த்திருக்கும்...!
பூஜைக்கு பின் குப்பையில் மலர்கள்
பெண்மையின் நிலையும் அதுவே...
தானாய் எதுவும் செல்லவில்லை
தரம்கெட்ட மனிதனின் செயலாலே!!
பிறப்பால் உயர்ந்த பெண்கூட
ஏழ்மையால் பிடிப்பின்றி...
சேரா இடம் சேர்ந்து
சேற்றினில் விழுகின்றாள்!
சேறாய் இவ்வுலகமிருக்கையில்
செய்யும் தவறுக்கு பொருப்பாரு!!
ஊரார் பேச்சில் குறையில்லை
பசியினை போக்கிட எவரில்லை!!
உற்றவனை இழந்த கைம்பெண்
படும் பாடோ அந்தோ பரிதாபம்...!!
கற்றக் கல்வியும் பயனில்லை
கால் காசுக்கு வழியில்லை...!
உழைத்து பிழைத்திட நினைத்தாலும்
கழுகு பார்வையால் அங்கங்களை
திராவகம் கொண்டு எரிக்கின்றார்!!
உற்றவன் போன அன்றே...
உள்ளமும் மடிந்தது
உன் கண் பட்டு
பட்டுடல் கருத்தது!
உணர்ச்சிகள் கொன்று ஜடமாய்
உலகில் நடமாடும் பினமாவாள்!
பெற்றப் பிள்ளையும் பாலுக்கேங்கிட
சுமந்த தாயவள் என்செய்வாள் !
பட்டினி சாவில் தினம் கிடப்பதை விட
பத்தினி வேஷம் கலைப்பது மேல்!
இளங்கணவன் சென்றான் கல்லறை !
உறவுகளெல்லாம் செல்லா சில்லறை !
உதவிகளற்ற நாட்டினில்
உல்லாசம் விரும்பும் ஆடவர் கட்டிலில்
உணர்ச்சிகளற்று கல்லாய் கிடத்தினாள் மேனி!காமலீலைகள் அரங்கேற்றி...
எறியும் தீயில் எண்ணையாய்
புழுவாய் எம்மேனியில் நெளிந்தே
அனலாய் வீசும் வார்த்தைகள்...!
உண்ணுனர்ச்சியை திணித்தாய் என்னுள்!
கசக்கும் வார்த்தையால் கசக்கி எரிந்தாயோ!!
உனக்கு மனமகிழ் தந்த எனக்கு
சூட்டிடும் பட்டமோ வேசி!!
தேனை பருகி திகட்டியபின்
திட்டித் தீர்க்கின்றாய்!!
அசிங்கம் அசிங்கமென
அரைகூவல் விடுக்கின்றாய்!!
மாந்தரை இகழும் மாமனிதா!!
அந்தபுரமென்ன உனக்கு புதிதா!!
கடவுளின் படைப்பில் களவி முதன்மை
பெண்களை குறைச்சொல்லிட அர்த்தமில்ல!
வேலை தேடி செல்லும் இடமெல்லாம்
மேனியைத்தான் மேலும்கீழும் பார்க்கிறான்!!
வாயில் பேச்சை நிறுத்தி
கைப்பற்றத் துடிக்கிறான்...!!
எல்லா ஆணும் ஒழுக்கமா இருந்திட்டால்
பெண்மைக்கு இந்த நிலையில்லை!!
இம்மண்ணின் மாதர் தாம் என்போம்!
மனிதம் எனக்கும் இருகென்போம்!
மங்கள வாழ்வை மதிக்கின்றோம்
வேண்டியா இதனை ஏற்கின்றோம்!
சமுதாயத்தில் சாக்கடையா நாங்கள்
உங்கள் கழிவுகளை சுமப்பதினாலா/!!
பலிச்சொல்லில் சபிப்பார் எல்லாம்
எம்மை புசிதிடத் தானே நினைப்பார் !!
கொடுமை கொடுமையென உரைப்பவர்
எம் கொடுமைக்கேளாது தவிர்ப்பது முறையா!?
உண்மையை சொன்னால் முறைப்பார் பலர்
நம்பிடத்தானே மறுப்பார்!!
உணர்ச்சியை அடக்கமுடியா
மானிடர் இருக்கும் வரை...
வேள்வி தீயில் மேனியை வருத்தி
வியர்வை மழையில் நனைகின்றோம்!!
இரவெல்லாம் மலராய் பூஜித்து...!
விடிந்ததும் கல்லாய் கடவச் சபிக்கின்றாய்!!
மாதராய் அல்ல !மண்ணாய் கூட
மதிப்பார் யாரும் இங்கில்லை !!