வாழ்க பாரத மாதா

பறந்து விரிந்த பாரத எல்லை
பரவி வாழும் பன்மத மக்கள்
இமயம் முதலே குமரி வரையில்
எங்கும் காணினும் இயற்கை வளங்கள் .....

மாநிலம் பலவகை இருந்தபோதிலும்
ஆயினும் அனைவரும் இந்தியராவோம்
கொண்டிடும் விலைபொருள் பலவென இருந்தும்
கூடியே பகிர்ந்திட்டு உண்டே வாழ்வோம் .......

வழிபடும் முறைகள் வேரென இருந்தும்
வணங்கிட ஆலயம் பலவும் உண்டு
மதங்கள் சொல்லும் நெறிகளின் வழியில்
மார்க்கம் பேணும் நிலையும் உண்டு.......

கருப்பென சிகப்பென இருந்தபோதிலும்
கருத்துக்கள் ஒன்றாய் சேர்ந்தே இருக்கும்
எதிரிகள் எல்லை மீறும் வேளையில்
எலும்பை முறித்திடும் ஒற்றுமை உண்டு .....

பேதங்கள் கலைத்து சாதனை செய்யும்
வாதங்கள் எங்களில் வந்து மறையும்
பாரத மண்ணில் பிறந்த நாங்கள்
பற்றுடன் வாழ்ந்து வாழ்வை கடப்போம் ......

பெற்ற தாயென நாட்டை மதித்து
பெருமைகள் பலவும் அதற்க்கு சேர்த்து
உற்ற மைந்தனாய் மண்ணில் வாழ்ந்து
உலகம் போற்றிட எவரும் வாழ்வோம் ......

வாழ்க பாரத மாதா
வளர்க இந்தியா புகழ்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Mar-14, 8:18 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 366

மேலே