அன்னை தெரேசா
அன்னை தெரேசா உம் சேவை மகத்தானது ,
நூறை கடந்த உம் சேவை ஆறாக ஓடுகிறது ,
ரோட்டோர அனாதை உம் உயிரா ,,
தெருவோர தொழுநோய் உம் பரிசா ........................
அன்னை தெரேசா பல்கலை கழகத்தில்
பட்டம் பெற்ற நீர் ,பாமர நெஞ்சங்களில்
தஞ்சம் அடைய பாற்கடல்
தாண்டி பணி செய்ய வந்தீரோ ?
அன்னை தெரேசா நீர் அமைதியின் சிகரம் ,
விரிந்திருக்கும் உம் கரம் ஏழைகளின் புறம் ,
சிலர் ஆசைக்காக வாழ்கின்ற இந்த உலகில் .
நீர் அமைதியை கடைபிடிக்கவே வாழ்ந்தீர் .............
பணம் புகழ் உம்மை தேடி வர அதனில் ,
செவிசாய்க்காமல் மனித நேயத்துக்காக ,
சேவை புரிந்த நீர் மனித மனம் புண்படாத பூச்செண்டு ,
நீர் பெண்ணாக பிறந்ததனால் தான் இவ்வுலகில் கண்ணாக இருந்துவிட்டிர் .....................
நோபல் பரிசு உம்மை நோகியே வந்ததோ ...........
நீர் பிறக்கும் போதே பிரார்த்தனை செய்து கொண்டாயோ
மனிதர்களுக்காக மன்றாட போகிறேன் என்று ............
அன்னை தெரேசா உம் முத்தான புன்னகையை
கொண்டு பலர் முகத்தில் புன்னகையை கண்டாய்
மறுமுறை உம் காலடி பாதம் மண்ணில்
பதித்து வர காத்திருக்கிறோம் நாங்கள் .................................