வானம்
இயற்கை ஓவியங்களின்
இல்லம்.....
வானம்பாடிகளின் வாசல் ....
உடல் நெளியும் மேகங்களின்
உல்லாச மேடை ...
முறுக்கிவிட்ட விமானங்களின்
விளையாட்டு மைதானம்.......
மழைத்துளிகளின் கர்ப்ப வயல் ..
பூமியின் புருஷன்
புல்லின் முகவரி ..
காற்றின் காதலி
நிறங்களின் தகப்பன் ....
விஞ்ஞானத்தின் விளக்கு
கவிஞர்களின் கற்பனை கடல் ...
இதோ தெரிகிறது
அடுத்த கவிதை இளைப்பாரும் நிழல் ...
தாகங்களோடு க நிலவன்