பெண்ணாய் பிறந்திங்கே

தவம் செய்ய வில்லை
வதம் செய்யும்
கலியுகத்தில் ... பெண்ணாய்
பிறக்கத்தான்
சிறு குழந்தை எனக்கு
சொப்பு சாமான் விளையாட
ஆணாக பிறந்த அண்ணனுக்கு
வீடியோ கேம் விளையாட...
நாலு ரொட்டி எனக்கு தந்து
மீதியெல்லாம் அண்ணனுக்கு
அவன் ஆண்பிள்ளையாம்
அரசு பள்ளியில் நான்்
ஒன்னாப்பு
ஆங்கில பள்ளியில் அண்ணன்
நாலாப்பு ....
அவன் படித்து
பெரியவனாகி
கஞ்சி ஊத்துவானாம்
அண்ணனுக்கு ஆயிரத்தில்
பேன்ட் சட்டை
முந்நூறில்
எனக்கு் பாவாடை சட்டை
தீபாவளி அன்று
ஆயிரம் வாலா சரவெடி
அண்ணனுக்கு
மத்தாப்பும் தீப்பெட்டியும் எனக்கு
அவன் ஜான் பிள்ளையானாலும்
ஆண்பிள்ளையாம்....
அம்மாவின் எடுபிடிக்கும்
பாட்டிக்கு கால்பிடிக்கும்
வேலையெல்லாம் எனது தானாம்
பொட்ட புள்ள போற இடத்தில்
குப்பை கொட்ட வீட்டு வேலை
தெரியணுமாம்....
பத்தாம் வகுப்போடு
என் படிப்பு முடிய
கல்லூரி தாண்டியும்
அண்ணன் படிப்பு தொடர..
பொட்டபுள்ள வெளியில் போனா
பாதுகாப்பு இல்லையென
வீட்டோடு எனை வைத்து
வெலை பழக்கும் அம்மா
காலா காலத்தில்
கல்யாணம் முடி
என்று பாட்டியும்
என்னை புகுந்த வீட்டிலும்
அடிமையாக்க
புறப்பட்டது என் குடும்பம்

எழுதியவர் : சித்ரா ராஜ் (20-Mar-14, 6:56 pm)
பார்வை : 109

மேலே