கவலை இல்லா பறவைகளாய்
பணம் தேடி
புகழ் தேடி
பணத்தின் வழி
படிப்பு தேடி
படிப்பிற்கு வேலை தேடி
வேலைக்கு சிபாரிசு தேடி
மண் தேடி மனை தேடி
மனைக்கு விளக்கமாக
மனையாள் தேடி
மனை விருத்தியாக
மக்களைத் தேடி
சொந்தம் தேடி
சுகம் தேடி
நட்பு தேடி...
நோயில்லா வாழ்வு தேடி
கடன் தேடி
கடமை தேடி
கடைசியில்
மரணம் வெல்ல வழியும் தேடி...
மாளாமல் மாண்டு போகும்
மனித வாழ்க்கை
பாவம் ! பாவம்!!
கவலைகள் ஏதுமில்லா
பறவையாய் வாழ்ந்திடதான்
களைத்த மனம்
ஏங்கி தவிக்கிறது....
கணத்த விழி
கலங்கி அழுகிறது...!