கந்தர்வ கானம் பாடும் இசைக் குயில்கள்

விரித்து வைத்த புத்தகத்தில்
விரியும் கவிதை வரிகளோ
உன் விழியிமையின் சலனம் !

விரல்கள் மீட்டிடும் வீணையில்
ஒடி வரும் இனிய ராகங்களோ
உன்னிதழின் தமிழ்ச் சொல்லமுதம் !

கவிந்திடும் அந்திப் பொழுதின்
அழகிய வண்ணச் சாயல்களோ
உந்தன் எழில் முகம் !

உன் தரிசனத்தில் என்னுள் விரியுதடி
ஓர் நந்தவனம்; இசைக் குயில்கள் பாடுதடி
அங்கே காதலில் ஒரு கந்தர்வ கானம் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-14, 7:26 pm)
பார்வை : 160

மேலே