அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------

மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....

-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...


தொடரும் .....

எழுதியவர் : கே இனியவன் (20-Mar-14, 7:28 pm)
பார்வை : 95

மேலே