பாடு பண் பாடு நம் பாரதப் பண்பாடு

பகையறியா வகையா திருநாடு?
பசியறியா வகையா திருநாடு?
திருநாடு, பகையோடும் பசியாறும்

இந்த தேசத்தின் நேசத்தில் மூழ்காது
உன் நேசத்தில் தேசத்தை மூழ்கவிடு

ஒரு தாய்மையும் நஞ்சினை பொழியாது
அந்த இயற்கையின் இயல்பது புகழேது?

நம் தேசத்தின் பெருமையை திரட்டாதே
அது வானத்தின் வரையறை விரட்டாதே

மக்கட்கோடி பேர்கள் உண்டு
கோடி பேர்கள் அவர்கட்குண்டு
மொழியே பெயராய் வேறு
எந்நாட்டவர்க்குண்டு

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
யாரும் வர வரவேற்போடு
அனுமதித்தோமே மதிப்போடு

பகைகொண்ட பாம்பிற்கே
பாலை வார்த்து விட்டோமே
பசிதீரப் பகையும் தீர்த்ததே

திசைறியா வகைதான் நம்நாடு
நம்நாடு பகையோடும் பசியாறும்
மிகையழியா வகைதான் நம்நாடு
கறையறியா(து) துடைப்போம் துணிவோடு

காட்டழிக்கத் துணிந்தவன்
கட்டைவிரல் முட்கண்டு
கட்டுத்துணி தேடலாமா?

எரிகின்ற விளக்கிடம்
திரிந்திரும் விட்டிலால்
எரிமலை அழலாமா?

தொட்ட புகழ் பற்று வளர்த்து
பட்ட வலி பற்றி விளக்கு கொடி
எட்டித்தொடும் தூரம் தான்

பிறநாட்டுப் பாட்டை முடக்கு
தன்நாட்டுப் பற்றை முடுக்கு கனி
எக்கித் தொடும் தூரம் தான்

எழுதியவர் : ராஜ ராஜன் (21-Mar-14, 7:36 am)
பார்வை : 504

மேலே