சாம்பார் இட்டிலி

மஞ்சள் பூசிய ஏரியில்
மெல்லத் தவழும்
வெள்ளை வாத்து......

சுட சுட ஊற்றிய சாம்பாரில்
சூப்பராய் ஊறும்
குஸ்பூ இட்டிலி.......

இது கொதித்தது
அது இனித்தது

கற்பனை சிரித்தது
கனவினை ருசித்தது

வெந்ததா ? வேகாததா ?
எனக்கேட்டது ஏரியில் சுழல்..........!!

விடை சொல்ல முயன்ற போது
விழியிரண்டும் மூடாமல் வியந்து நின்றது ....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (21-Mar-14, 10:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 96

மேலே