கவிதைத் துளிகள்
விலையில்லாக் காகிதம்
விலை ஏறிவிட்டது
அடியில் உனது கையொப்பம்.
பூக்கள் சிரிக்கின்றன
மலர் வளையத்தில்.
மரணித்தது தேள்.
கொட்டியதாம்
அரசியல்வாதியை.
பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடாம்
வரவு செலவு திட்டத்தில்.
துண்டு விழுகிறது ஏழைகளின் தலையில்.