சிந்தீப்பீர்
கவிதையின் சூழல்:
இலங்கையில் நமது இரத்தஉறவுகள் இழிவு படுத்தப்பட்டபோது...
சுயநலம் உடைய மனிதனே
பொது நலம் கொண்டு கொதித்தெளுவாயாக
அங்கே பாராட - நம்
குல விளக்கு ஆடவர் பெண்டீரின்
அவல நிலையை - இதை நீ
இன்னுமா காணவில்லை ?.
போரில்,
மரணம் ஏற்பட்டால் புதைப்பது தானே மரபு
இங்கே - போரில்,
எம்குல ஆடவர் பெண்டீரின் -ஆடைகள்
கலைக்கப்படுவதை பாரடா?...
செத்த சிங்கத்தின் மீது
எலி ஏறி விளையாடுவது போல்
எம் குல பெண்களின் இறந்த - உடலினை
கண்டு ரசிக்கிறதடா அவ்வினம் ?...
உறங்கும் சிங்கம் சீறிட்டெழுந்தால்
எலியின் கதை அதோ கதிதான் -அதுபோல்
உறங்கும் எம்குலம் புறப்பட்டால் - உன்னினம்
அடியோடு வேரருக்கப்படும் - ஆனால்
உன்னை போல் பெண்களை இழிவு படுத்தமாட்டார்.
என்ன கேட்டோம் நாங்கள் ?..
ஏன் இப்படியொரு நிலை ?...
தனியொரு அமைதியான இடம் கேட்பது
அழிக்கவேண்டிய செயலோ வினா எழுகிறது என்னுள்-
இத்தனை நிகழ்ந்தும் இதை கண்டு
நீ அமைதி கொண்டால் நீ மனிதன் அல்ல
மரம். - இல்லை
அது கூட பயன் தரும் - அதை விட
தாழ்ந்தவன் நீ.
எனவே மனிதா - நீ
போரிடு உனக்கு
இயலும் வகையில் போரிடு...