நிழல் தேடும் நிஜம்

துரத்தும் நேரம், பறக்கும் பொழுது - நம்மைத்
தானியங்கிப் போல் இயக்கும் வாழ்க்கை,
ஓடுவது எதற்கு என அறியாமல் - நாடெங்கும்
ஒட்டு போட்ட இதயங்கள் துடித்தபடி.

விழி வழி உறங்கும் கனவுகள் - முயன்றால்
வழுக்கும் என ஐயத்தில் அவனி
சமூகத்துக்காகப் புதைத்த பலரின் கனவுகள் - முழுமையாகச்
சாகாமல் சுழற்றி, புரட்டி கொண்டிருக்கும்.

தணலேச் சுடராகத் திகழும் காலம் - இனி
தன்னுலுள்ளக் கனல் பெரிதாக ஒளிர,
நிஜத்தின் பதிவு நிழலைச் சிதைக்கும் - இன்றே
நின் கனாவை விழுதாக்கு இப்பிறப்பில் !!

எழுதியவர் : பவித்ரன் (23-Mar-14, 3:33 pm)
சேர்த்தது : pavithran
Tanglish : nizhal thedum nijam
பார்வை : 357

மேலே