என் தேசம் ஏன் இப்படி
களத்துமேட்டில் கலப்பை
பிடித்த கைகளும்,
கஷ்டமுனா என்னவென்று
உணர்ந்த மக்களும்,
அரசு வழங்கும்
ஊரக வேலைவாய்ப்பிலும்,
இலவசங்களிலும்
முழுசோம்பேறிகளாக
ஊர் மூலையெங்கும்....!!!!!
விளைச்சலைப் பெருக்க முடியல.
கூலிக்கு ஆள் இல்லை.
இப்படியே போனால்
இந்தியா விவசாய நாடு இல்ல...!!!!
கால மாற்றங்களோடு
கட்சிகள் மாறுவதைப்போல்,
நெல் விதைத்த
நிலங்களெல்லாம்
கல் விதைத்துப் பல
கட்டடங்களாக
மாறி வருகிறது.
இக்கால இந்தியா...!!!!
எங்கு விளையும் பருப்பு..?
என்று தணியும்
இந்த வெறுப்பு....!!!
என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்
இந்த உண்மையெல்லாம்
பொய்யாகுமோ...???
இப்படியே போனால்,
வெளி நாட்டிலிருந்து
வெங்காயம் வரும்...!!!
சிங்கப்பூரிலிருந்து
சீரகம் வரும்...!!!
சீனாவிலிருந்து
அநியாய விலையில்
அரிசி,பருப்பு வரும்...!
அமெரிக்காவிலிருந்து
செயற்கை தயாரிப்பில்
செயின் போல
நூடுல்ஸ் வரும்...!!
உருப்படியா ஒருவேலையும்
செய்யாத
சோம்பேறிகளையும்,
இலவசங்களை நம்பி
எடை பெருக்கும்
பூசணிக்காய்களையும்,
ஒன்றும் செய்ய முடியாதோ..?
விளை நிலங்களை
விலை நிலங்களாக
மாற்றும் முதலைகளை
மாற்ற முடியாதோ?
விவசாயம் மீண்டும்
தலை தூக்கட்டும்...!!!
தொழிலாளிகள் பற்றாக்குறை நீக்க
புதிய தொழில் நுட்பம்
வளமான இந்தியாவில்
வளர வேண்டும்...!!
ரியல் எஸ்டேட்
ஒழிய வேண்டும்..,!!!
தரமான உணவு பொருள்கள்
நியாயமான விலையில்
மன நிறைவோடு
கிடைக்க வேண்டும்..!!