ஆசிரியர்களுக்கு

விளையாட்டுக் குணமும், சிறுபிள்ளைத் தணமும், குடியேறிய எங்கள் மனதை, விளையும் நிலமாக மாற்றி, கல்வியறிவை ஊன்றி, மாணவன் எனும் பயிரை வளர்த்து, மணிக்கணக்கில் போதனை நீரை ஆற்றி, களை முளைத்தால் பிரம்பால் வெட்டி எடுத்து, துவண்ட போது தோளில் தட்டிக்கொடுத்து, எங்களை வளர்த்திட்ட ஆசானே, பள்ளிக்காலத்தில் பாடபுத்தகங்களை மட்டும் பயிற்றுவித்தது போதாதென்று, வாழ்க்கை பாடங்களையும், வாழ்ந்து காட்டும் விதங்களையும், கலங்கரை விளக்காய் நின்று வழிகாட்டிய தோழரே.... தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உங்களிடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் வாகை சூடும் போது கிடைப்பது என்னவோ? சாதனையாளன் எனும் பெயர்தான்-ஆனால் மீண்டும் எப்போது கிடைக்கும் உங்கள் வகுப்பறை வருகை பதிவேட்டில் எங்களின் பெயர்,.

எழுதியவர் : இராஜ்பி (23-Mar-14, 3:59 pm)
சேர்த்தது : இராஜ்பி
Tanglish : aasiriyargalukku
பார்வை : 47

மேலே