தமிழின் சிறப்பு

அமிழ்து சுவை அறிந்தவர்தம் !
இவர் தவிர வேருமிலர் ..
அவர்தாம் நம் முன்னோராம்..
மேலுலக வான் தேவராம்.


இன்னும் உளர்...
அமிழ்து சுவை அறிந்தவர்கள்.
என்பதுதான் என் வாதமே!
"தமிழன்" தான், "தமிழன்" தான்
சுவைப்பவனே.

,
"தமிழ்" என்று, "தமிழ்" என்று..
முணங்கிவிடு ...
ஒரு நாளிகை , சில நொடிகள் ,
கடத்திவிடு ..
"அமிழ்து" எனும் "அமிழ்து" எனும்
சுவை கிடைக்குமே...

சிந்தைக்கும் விந்தைக்கும் ..
நூல்கள் பல ....
மருந்திற்கும் விருந்திற்கும்
நூல்கள் சில....


பஞ்சை நீ நூலாக்க
திரட்டிவிடு ...
அடியை நீ கவியாக்க
பதம் பொறுக்கி(எ)டு.


ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதமாகுமே!
என் தமிழின் சிறப்புதனை
குறள் உணர்த்துமே ,,,


நம் மொழியின் சிறப்புதனை
உணர்த்திவிடு...
திக்கெங்கும் திசையெட்டும்
பேசட்டுமே!


தமிழ் வாழ்க.. தமிழ் வாழ்க..
தமிழ் வாழ்கவே....


வாழ்க தமிழ்!

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (23-Mar-14, 4:44 pm)
Tanglish : thamizhin sirappu
பார்வை : 14439

மேலே