கானல் நீருக்குள் தாகங்கள் தேடி

கவிதைக்குள் ஓவியம் வரைந்தான்
- பிரம்மன்
கன்னியர் முகத்தில் சிரிப்பை வரைந்தான் - ஆண்கள்
கண்களுக்குள் ரசனையை விதைத்தான் - அவர்களை
கலா ரசிகராய் மாற்றியே சிரித்தான்.....!!

கனிகளுக்குள்ளே இனிப்போ இது ? என்
கருத்துக்குள்ளே தமிழோ இது ? இவள்
சிரிப்புக்குள்ளே மல்லிகை பாணமோ ? என்
சிந்தனை கொயயவே மன்மத வேஷமோ ?!

என்றெண்ணி உறங்க முயல்கிறேன்
என் இமைக்குடைக்குள்ளும்
அவள் லிப்ஸ்டிக் வண்ணம்

எழுந்தமர்ந்து அவளை நினைக்கிறேன் - அடடா
என் இதயத் துடிப்பிலும்
இனிய இச் இச் சத்தம்.......!!

கட்டிலுக்கும் காது புளித்தது - காரணம்
கண்டபடி காதல் உளறல்......
கட்டை அது வேகும்போதும் - உடையும்
கனல் அதற்குள் ஆசைப் பதறல்.....

சட்டென்றே ஞானி போலாகிறேன் - மறுநொடி
சந்தோசமாய் காதலை நினைக்கிறேன்...

காதல் பைத்தியமாக்கும் என்றே
கருத்தில் தெளிகிறேன்........!

தெளிந்தும் குழம்புகிறேன்.....இன்னும்......

தெரிவது அங்கே - என் மங்கிய விழியில்......

அவளா...?
அவளா...?
அவளா...?

என்ன தாத்தா தேடுகிறீர்கள் ?
என்று பேரன் வந்து கேட்டான்.......

டேய்....பேராண்டி.......

தாத்தாவோட கண்ணாடிய எங்கேயாச்சும்
பார்த்தியா.....? என்றபடி

மறுபடி என் முகமூடியை அணிந்து கொள்கிறேன்

வழக்கம்போல........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Mar-14, 11:28 pm)
பார்வை : 84

மேலே