ஓ மனிதா

ஓ மனிதா!
அகிலம் போற்றும் அன்னை தெரேசாவாக இருக்க வேண்டாம்-ஆனால்
அண்டை வீட்டுக்கு உதவிடும் நல்ல மனிதானக இருந்துவிடு!
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிடும் வள்ளலாராக இருக்க வேண்டாம்-ஆனால்
வாடிய மனிதனை மீண்டும் வதைக்காமல் இருந்துவிடு!
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியாக இருக்க வேண்டாம்-ஆனால் பிறர்க்கு
தொல்லை கொடுக்காத நல்ல நண்பனாக இருந்துவிடு!
மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனாக இருக்க வேண்டாம்-ஆனால்
எளியவனின் துயிலுக்கு சேதம் தராமல் இருந்துவிடு!
தேசம் போற்றும் மகானாக இருக்க வேண்டாம்-ஆனால்
தாய் போற்றும் நல்ல மகனாக இருந்துவிடு!