நினைவெல்லாம் நீயே

உன் பெயரின்
அறிமுகம் தான் ஆரம்பம்
காண்பவரை எல்லாம்
உன் பெயரை கொண்டு
கற்பனை செய்த
முட்டாள் நான்
அப்படியும்
ஒரு நாள் என் கண்ணில்
அகப்பட்டாய் நீ
அன்று முதல்
அகலவில்லை
என் கண்ணை விட்டு
விதை எப்படி
மரம் ஆகிறது என்ற
அறிவியல் தெரியாத
எனக்கு
உன் கண் பார்வை
பட்டால்
என் வாழ் நாள்
அதிகரிக்கும்
என்ற அறிவியல்
புரிந்தது ஆச்சரியம் தான்
காதல் சொல்ல
உன் கண் பார்க்கும்
துணிச்சல் இல்லாமல்
கடல் கடந்து போய்
காதல் சொன்ன வீரன் நான்
காதலிக்கிறேன் என்று
சொன்னால்
உனக்கு என்னை
கை பிடிப்பாயா என்ற
சந்தேகம் வரும் என்று
உன்னை
கல்யாணம் செய்ய
ஆசை படுகிறேன்
என்று சொன்ன
ஆர்வ கோளாறும் நான் தான்
எதுவாகினும்
நீ வந்த பின்பு
நான் நானாக ஆனேன்
அதுவும்
நாளை நாமாக
ஒரு பெண்ணால்
ஆணை அழ செய்ய
முடியும்
நீயும் என்னை
அழ செய்து இருக்கிறாய்
உன்னை பிரிந்து
நான் இருக்கும்
தருணங்களில்
எட்டு வருடம்
ஆகிறது
நாம் காதலிக்கிறோம்
என்று
நீ நினைக்கிறாய் ,
கல்யாணம் ஆகி
வாழ்கிறோம்
என்று
நான் நினைக்கிறேன்
அன்பை பரிமாறி கொள்ள
காதல் ஒரு
அருமையான வழி
நமக்கு
உன்னை
சரணடைந்தேன்
என்
அன்பு காதலியே