நீயும், உன் சில இதுகளும்

உன் பெயர்
நான் உச்சரிக்கும்
மந்திரம் !

உன் பேச்சு
நான் ரசிக்கும்
கவிதை !

உன்
தொண்டைச்செருமல்
எனக்கு
இன்னிசை !

நீ
கடித்துத் துப்பும்
நகம்
நான்
பார்க்க விரும்பும்
மூன்றாம் பிறை !

கைகள் உயர்த்தி
நீ முறிக்கும்
சோம்பல்
எனக்கிடப்படும்
பிச்சை !

உன் பார்வை
எனக்கான
recharge !

உன் ஸ்பரிசம்
எனக்களிக்கப்படும்
வரம் !

உன்
உதிர்ந்த கூந்தல்
எனக்கான
மயிலிறகு !

உன் வியர்வை
என்னைப் பொருத்தவரை
தீர்த்தம் !

உன்
எச்சில் பட்ட
எதுவும் எனக்குப்
பிரசாதம் !

உன்
காலடி மண்
எனக்குத்
திருநீறு !

உன்
முத்தம்
எனக்கான
மோட்சம் !

நீ
என் பிறவிப்பயன் !

எழுதியவர் : குருச்சந்திரன் (25-Mar-14, 10:58 am)
பார்வை : 107

மேலே