இரு இதயம் இடம் மாறும் - மணியன்

இரு இதயம் இடம் மாறும்
இரு விழிகள் கவி பாடும்
இருப்பதுவும் களித்த பின்னும்
இல்லாதக் கனவில் வீழும். . . . .
**********
கனவினிலே மனம் கரையும்
காதலிலே தினம் உறையும்
கவிதைகள் பிறக்கும் களம்
காதலுக்கு இதுதான் குணம். . . .
**********
ஏனென்றும் தெரியாமல்
என்னவென்றும் புரியாமல்
எப்பொழுதும் புது புதிரை
ஏந்தி மனம் தினம் கிறங்கும். . . . .
**********
புத்தம் புது நினைவுகளும்
மொத்தமாக குடி ஏறிவிடும்
அத்தனையும் உண்ட பசி
பத்துடனேப் பறந்து விடும். . . . .
**********
சொல்லச் சொல்ல வாய் மலரும்
மெல்ல மெல்ல மனம் மணக்கும்
தள்ளத் தள்ள தேடி வரும்
அள்ள அள்ளக் கவிதை தரும். . . . .
**********
பாங்குடனே கவிஞர் எல்லாம்
பாடிடுவர் காதலையே. . .
பாரினில் மாந்தர் காதல்
படைத்தவனின் சீதனமே. . . . . .
**********
கோடியிலும் ஒன்று இரண்டு
காவியமாய்ப் போனால் நன்று
கோவலனும் கண்ணகிக் காதல்
கொலையினிலும் நின்றது வென்று. . . .
**********
யாவும் இனி எப்பொழுதும்
காதலிலேக் கனிந்து உருக
பாவலனாய்க் கவிதை கிள்ள
யாவருமே காதல் செய்க. . . . . .
**********
மண்ணில் இனிக் காதலரைக்
கண்ணிரண்டில் ஒற்றிக் கொள்க . . .
தண்ணெனவேக் குளிர்ந்து மனம்
தளிரெனவே வளரச் செய்க. . . . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*