தாய்மை
தாய்மை
கனவுக்குள் கனவுபோல்
கவிதைக்குள் கருத்து போல்
உனக்குள் ஓர் உயிர்.
சட்டிக்குள்ளே சட்டி இருப்பதை பார்த்திருப்பீர் இங்கே
உடம்புக்குள் உடம்பு இருப்பதைப் பாரீர்
கல்லிற்குள் தெய்வம் போல்
மண்ணிற்குள் நீர்போல்
உன்னுள்ளே ஓர் உயிர்.
ஆயிரம் தேனீ கூடி கட்டிய தேன்கூடு உண்டு.
நீ ஒருத்தி கட்டிய நடக்கும் தேன்கூடு உன்னுள்ளே
என் தாயே !