எப்போது தீரும் வலி

போட்டார்கள்
மயக்க ஊசி
இலவசமாய் மக்களுக்கு!
அரசியல் வைத்தியர்கள்
அல்ல அல்ல மைத்துனர்கள்!

மருந்துக்காய் அல்ல
மக்களுக்கு தான் செய்த
கொடுமைகளை
மறப்பதற்காய் மெல்ல!

கையெழுத்து வாங்கியே
அரைக்காணி நிலம் பிடுங்கி
எடுத்தெறிந்தார் வீதியில்
அனாதையாய் என் மக்கள்!

மயக்கம் தெளிந்த பின்னாலும்
ஊசிபெற்ற வலி இன்னும்
தீராமல் கடல்நீர்போல்
கண்ணீரில் என் மக்கள்!

ஐந்து வருடம் கழித்து
மீண்டும் ஊசி தயார்!
வலி போகும் என்று நம்பி
ஊசிபோட்டு கொள்ள
இப்போதும் என் மக்கள் தயார்!

எழுதியவர் : உமர் ஷெரிப் (26-Mar-14, 10:17 pm)
பார்வை : 163

மேலே