ஏழை என் பாடு
சிவந்திருக்கும் என் கண்களை
கேட்டுப்பார் அவலம் சொல்லும்
உறக்கமில்லா இரவுகளின்!
முதுகோடு ஒட்டியிருக்கும்
என் வயிறை கேட்டுப்பார்
உறக்கமில்லா காரணத்தை!
சிவந்திருக்கும் உன் கன்னம்
கொழுத்திருக்கும் உன் வயிறு
கேட்டுப்பார் அழகாய் சொல்லும்
இரக்கமில்லா உன் மனதை!