எந்தன் உயிரே அம்மா
முழக்கருவினிலே
முண்ணுறு நாள் சுமந்து உயிர்
என்னும் காற்றை என்
உடலுக்குள்
ஊட்டினவள்.................//
எந்தன்
உயிரையும் எந்தன்
உடலையும் உயிராக...............//
உறவோடு கலந்து
மனதோடு மகிழ்வாக
உணர்வோடு இணைந்து
நினைவோடு நினைவாக
தாங்கியவள்.................//
பாசத்தை
கொடுத்தவள் நிலையற்ற
உலகில் மனித வேசத்தை
கொடுத்தவள்.................//
எனை சீராட்டி தோல்
சுமந்து சுகம் துறந்து சுமை
மறந்து விழித்திருந்து
தனை மறந்து
பசித்திருந்து துயில் துறந்து
பாசத்தை தந்தவள்...........//
என் அருகில் நீ
இருக்க நிலா சோறு நான்
பருக தினமும் என் அருகில்
எனை கண்டு ரசிப்பவள்...........//
எனை என்றும் சுமப்பவளே
எந்தன் உயிரே அம்மா...........//