நெருப்பு என்னை நெருங்காதே

நெருப்பு என்னை இருக்கமாய்
அணைத்தால் இல்லாமல்
செய்துவிடுவேன் ஈரமாய்
அணைத்தல் இல்லாதுபோவேன்
ஆதிமனிதன் அன்று என்னை
உரசி உரசியே உயிர்கொடுத்தான்
உஸ்னமானவன் ஊன் சமைக்க
உதவியாயும் இருப்பவன்
உலகம் வகுத்துவைத்த அந்த
பஞ்சபூதங்களில் எனக்கென்ற
தனிச்சிறப்பு இரண்டுண்டு
அது வாழ்க்கை தத்துவம்கூட
என்னை தாழ்த்திப்பிடித்தாலும்
உயரவே எழுந்தெரிவேன்
எதை நான் எரித்தாலும் அதை
என்னோடு சேர்க்கமாட்டேன்
நெருப்பே உன்னிடமொரு கேள்வி
எதற்காய் நீ சாதி கலவரத்திலும்
அரசியல் சகுனியின் சூழ்சியிலும்
நாசத்திற்க்கேன் துணைநிற்கிறாய்
பாமர தொண்டனை மட்டுமேன்
உன்னில் குளிக்க சம்மதித்தாய்
பாய்ந்து நீ பற்றி பிடிக்ககூடாத
பார்த்து ரசிக்கும் தலைவன் தேகம்
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்,,,,