புளிப்பா - கே-எஸ்-கலை

கடவுளர் இடம்பெயர
விலங்குகள் பறவைகள்
மனிதனுக்கு கடவுளே !
====
கரும்புக் காடு
கொஞ்சமும் இனிப்பறியா
எறும்புக் கூடு !
====
வீரிட்டெழும் குழந்தை
வேறொன்றும் ஆகவில்லை
தாலாட்டு பாடினாள் !
====
விடியவில்லை
ஊர்ஜிதப் படுத்தியது
காலைச் செய்தி !
===
தேர்தலின் பின்னர்
மறுபக்கம் திரும்பிப் படுக்கும்
எ(உ)ங்களின் நாடு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Mar-14, 8:35 pm)
பார்வை : 206

மேலே