பாவி மனிதா

பாவி மனிதா -
நான் பசு பேசுகிறேன்
இரக்கமில்லா உன்னை எண்ணி
இழிவு கொள்கிறேன் ......

என் உயிரை உறிஞ்சி பாலாய் குடித்து
உதிரம் கறந்து காசு பார்த்து
இரையை மறுத்து என்னை துரத்தி
எங்கெங்கோ அலையவிட்டாய் .....

காசு கொடுக்கும் காமதேனு
நான் கறக்கும்வரையில் கடவுள்தானே
பாலுவற்றி வயதை கடந்தால்
இறைச்சி கடைதான் எந்தன் வீடு ......

கழிவு முழுதும் எருவாய் மாற்றி
பாலை முழுதும் காசாய் மாற்றி
வாழும் வரையில் உதவி புரிந்து
மாண்ட பிறகு இசையாய் வாழ்ந்தேன் .......

நன்றி மறந்த நல்ல மனிதா
உன்னை நொந்து பயனுமில்லை
பெற்ற தாயை மறந்த நீயோ
என்னை எப்படி நினைவு கொள்வாய் .....

பத்து மாதம் சுமந்த அன்னை
பாலை தந்து வளர்த்த அன்னை
பாசம் கொண்டு உன்னை அவளும்
பரிவோடு வளர்த்த அன்னை .......

ஊட்டி வார்த்த பாலுக்கு இங்கே
உண்மை நன்றி மறந்து போகும்
நன்றி என்ற வார்த்தை மெல்ல
நாளை உலகில் மறைந்து போகும் ......

பாம்புக்கு வார்க்கும் பாலைப்போல
பாழும் உனக்கு நானும் வார்த்தேன்
உன்னை வளர்த்த என்னை நீயும்
உணவுக்காக என்னை கொன்றாய் ......

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Mar-14, 10:48 am)
Tanglish : paavi manithaa
பார்வை : 88

மேலே