நான் கற்றேன் வாழ்க்கை பாடம்

வாழ்க்கை என்னும் நாடகத்தில்
வறுமை என்னும் நோயபிடிக்க
கசக்கின்ற அனுபவத்தால்
கற்றுவந்தேன் பாடம் தன்னை .....

காகிதப்பூ பூத்திருக்கும்
காலமெல்லாம் வதங்காது
நேத்துவந்த ரோஜாவும்
நீ பறிக்க சுருங்கிடுமே ........

பணமென்னும் காகிதத்தை
பற்றிடுமே உலகமெல்லாம்
குணம் கொண்ட உன்னைத்தான்
குப்பையிலே போட்டிடுமே .....

பூத்திருந்த பூஞ்சோலை
பூவெல்லாம் வண்டு மொய்க்க
தேனெடுத்த காலம் போக
திரும்பி அது வரவில்லே......

இருக்கும்வரை இருந்த சொந்தம்
இழந்தபோது ஓடிப்போக
நடுத்தெருவில் நின்றபோது
நான் கற்றேன் வாழ்க்கை பாடம் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Mar-14, 9:55 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 86

மேலே