விடையில்ல வினாவாய் நான்

உறக்கமேனோ என்னில்
இறந்துவிட்டது இறக்காமல்
உயிரினும் பற்றிக்கொண்டது
வாழ்வின் அர்த்தமததை
புரிந்து வாழ்கிறேனா !!!
வாழ்த்தெரியாமலே தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேனா ???
வழிமாறிய தடங்கலால்
வலிகள் மட்டுமே மிச்சம்
நீரில்லா தடாகத்தில் தாமரையாய்
நான் தத்தளிக்காமலே
தவித்துக்கொண்டிருக்கிறேன்
அவமானம் செய்வதாய் எண்ணி
தன்மானம் தீண்டி என் மானம்
போக்க அன்றாடம் அரங்கேறும்
அவதூறு நாடகங்கள் அசிங்கமென்று
நினைக்கவில்லை பொய் என்பதற்கு
அகோர வலிமையுண்டென என்ற
உண்மைதனை அறிந்துதால்,,,,


உயிரை உரசிக்கொண்டு
உள்ளம் உறுத்திக்கொண்டே
ஊமையின் மொழியாய்
குழந்தையின் அழுகையாய்
கால்கள் கட்டப்பட்ட குதிரையென
இலக்கில்லா எல்லையை நோக்கி
கண்கள் கொய்யப்பட்டு
பார்வையாளர் யாரேன்றரியாமலே
பந்தைய மைதானத்தில் நான்
தோல்வியே நிச்சயக்கப்பட்ட
பின்பும் சாகும்வரை சாட்டியடிகளை
ஏற்றுக்கொண்டு நின்ற இடம்தனிலே
நின்றுகொண்டே நித்தமும்
நரக வேதனை இன்னும் விடியாத
விடியலை எதிர்நோக்கி விம்மி
தெறிக்கும் சின்ன இதயத்தோடு
விடையில்ல வினாவாய் நான்
உண்மை ஒருநாள் உலகறியும்
என்ற உறுதியான நம்பிக்கையோடு,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (28-Mar-14, 4:42 pm)
பார்வை : 57

மேலே