வானமும் நிலவும்
செதுக்காமலேயே
சிற்பங்களாகி விடும்
வான்மேகங்கள்....
****************************
நிலாவை செதுக்கியதில்
சிதறிய சிறுகற்களோ
விண்மீன்கள்....
****************************
நிலவை ரசிப்பவர்கள்
மறந்து விடுகின்றனர்
சூரியனை.....
****************************
வெற்றிலை போட
யார் கற்றுக்கொடுத்தது
அந்தி வானத்திற்கு....
****************************