சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 10
சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம் .. 10
10.
முதலில், மண்ணுலகத்திற்குக் கீழ் அமைந்துள்ள உலகங்களைப் பற்றிச் சொல்கிறேன். கேட்டுக்கொள்.
இவை மனிதனிடம் உள்ள தீயகுணங்களைக் குறிப்பவையாகும்.
பூலோகத்திருக்கு அடியில் இருக்கும் உலகங்கள் ஏழு. அவை .. அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ரசாதல, பாதாள லோகம்.
அதல லோகம் காமுகர் மற்றும் பெண்ணாசை கொண்டர்வர்களுக்காக ஸ்ரிஷ்டிக்கபட்டது,
மாயன் என்பவனின் மகன் பாலா. மாயா சக்தி படைத்த அவன் ஒரு கொட்டாவி விட்டு .. ஸ்வைரிணி, காமினி, பும்ஸ்கலி என்ற மூன்று பெண்களை உருவாக்கினான். இதில் ஸ்வைரிணி என்பவள் தன் இனத்தை மணக்க விரும்பும் பெண்கள் என்று சொல்வார்கள். காமினி எந்த இனத்தையும் மணக்க விருப்பம் உள்ள பெண்கள். பும்ஸ்கலி, கணவனை மாற்றிக்கொண்டே இருக்கும் பெண்கள் என்று கொள்ளலாம். இவ்வகைப் பெண்கள் போதை ஏற்றும் பாணங்கள் அருந்தச் செய்து கணவரை எக்கணமும் வரவிருக்கும் மரணத்தை மறக்கச் செய்வார்கள்.
கிங்கரர்களே ! அப்படி என்றால் பெண்ணாசை கொண்டு இறந்தவர்கள் எல்லோருமே அவரது மறுபிறவியில் அதல லோகத்தில் பிறப்பார்களா ?
அப்படித் தான் என்று பொருள் கொள்ளவேண்டும் .. மானுடா !
அய்யோ ! அய்யோ !!
ஏன் கூச்சலிடுகிறாய் ?
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறாயா ?
சொல்லாத்தான் நினைக்கிறேன் .. ஆனால் ...
முடியவில்லை என்கிறாய். அப்படித்தானே !
ஆமாம். சொல்லாலே விளக்கத் தெரியல்லே. அதை சொல்லாமலும் இருக்க முடியல்லே.
சரி .. சரி .. நீ ஒன்றும் சொல்லவேண்டாம். எங்களுக்குப் புரிந்து விட்டது.
நான் சொல்ல வந்தது என்னெவென்றால் அதலலோகத்தில் பல குறுநில மன்னர்களும், ஜமிந்தார்களும் நிறைந்திருப்பர்களே.!
எனெக்கொரு பாடல் நினைவுக்கு வருகிறது. சொல்லட்டுமா ..
சொல்.
காமுகர் நெஞ்சில் நீதியில்லை .. அவர்க்கு தாயென்றும் தாரம் என்றும் பேதமில்லை என்ற பழைய பாடல் ஒன்று.
போதும். இனி நான் தொடர்ந்து சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்.
- வளரும் -