என் உயிர் தமிழ்
தமிழை உயிர்போல் கருதிடுவோம் ,
விதையொன்று நன்மையாய் விதைத்திடுவோம்...!
நிலம் பிளந்து , சீறியெழும் தமிழ்,
வளந்தது இன்று நட்பற்றோடு நட்ற்றமிழ்!
ஊற்றிடுவோம் அமிர்த நீர் நித்தமும்,
முன்னோர் மாண்ட பின்னும்
ஊற்று நீர் நித்தமும்!
வளர்க்கவே பல வழிகள் இருந்தும் ,
வளர்க்க தமிழன் வரவில்லை!
நீர் ஊற்ற வரவில்லை !
நித்தமும் நீர் தரவில்லை!
நினைத்து பார் தமிழை-உனக்குள்
விதைத்து பார் ஒரு விதையை.........!