கல்கியின் காதல்
48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.
45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........
பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!
பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......
உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,
அப்பொழுது மாணவர்கள் அனைவரும் கத்த ஆரமித்தனர்....!
இப்போ பாடம் நடத்தவேண்டாம் மேடம்,
எப்பொழுது பாடம் என்றால் போர் அடிக்குது மேடம்...என்று பசங்க ஆக்ரோஷமாக கத்த?????
மாணவிகள் ஏதாவது கதை சொல்லுங்க மேம் என்று கூறினர்.
சரி!கதை சொல்கிறேன் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று சொன்ன ஆசிரியை புத்தகத்தை மூடி மேஜையின் மீது வைத்து விட்டு உட்கார்ந்தார்.
தனது கண்ணாடியும் கழற்றி வைத்து விட்டு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.........
38 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச்சம்பவம் என்று கதையை தொடங்கினார்................
அது ஒரு அழகான கிராமம் என்று தொடங்கி மாணவர்களை தன் ரசனை உலகத்துக்கு அழைத்து சென்றார் பேராசிரியை,,,,,,,,,,,,
கிராமத்து இடம் என்பதால் சுற்றி இயற்கை வனப்புடன் மிகவும் அழகாய் இருக்கும்.....!
பச்சை பசேலென்று வயலும், தென்னந்தோப்புக்களும், கரும்பு, வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், பூந்தோட்டங்களும், நதி, குளம், குட்டை என அழகாய் அமைந்த ஊர் அது.
ஊரில் சிறுவர் சிறுமியர் பட்டாம்பூச்சிகளாய் அங்குமிங்கும் சுற்றி சந்தோஷமாய் வாழ்ந்து வந்தனர்......!
5வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பேசி விளையாடலாம்.
அதற்கு மேல் யாரும் பழகவோ, பார்க்கவோ, பேசவோ கூடாது அண்ணன் தங்கையைத்தவிர!!!
ஒரு பொண்ணும் பையனும் சிறு வயதிலிருந்தே இருவரும் சேர்ந்து பழகி வந்தனர்,,,
5 வயது தாண்டிய பிறகும் கண்களால் வார்த்தைகளை பரிமாற்றம் செய்து வந்தனர்.......
(இந்த பொண்ணுக்குதான் நாளை திருமணம் இன்னொரு பையனுடன்)
அந்த ஊருக்கு பெரியவர் கட்டளைப்படி ஊரில் உள்ள பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடத்தி வைக்கும் சம்பிரதாயம் வழக்கத்தில் இருந்து வந்தது.
ஜாதகத்திலும், கடவுளிடமும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர் அந்த ஊர் மக்கள்.
(பெரியோர் முதல் சிறியோர் உட்பட)
அந்த ஊர் மக்கள் தோற்றத்தில் எளிமையானவர்களாகவும் வள்ளல் தன்மை உடையவர்களாகவும் இருந்து வந்தனர்.......!
ஒரு மாதத்திற்கு இரண்டு திருமணமேனும் நடைபெறுவது வழக்கம்.....
அன்றும் ஒரு திருமணம் குமாரசாமி ,வள்ளி தம்பதியினரின் 14வயது மகனுக்கும்...,
செல்லப்பன்,கமலம்மாள் தம்பதியரின் 6வயது மகளுக்கும் திருமணம் என்று பெரியோர்களால் நிச்சயம் செய்ய பட்டபடி சிறுவர்களின் திருமணம் இனிதே நடை பெற்றது...........!
திருமணம் முடிந்த நான்காவது நாள் அந்த 6வயது பெண்ணின் கணவன் பாம்பு கடித்து இறந்து விட்டான்......
அதிர்ஷ்ட கட்டை என்று சொல்லி அந்த பொண்ணை அனைவரும் ஒதுக்கி வைத்தனர்.
பெற்றோரும் வெளியில் ஏதாவது விசேஷம் என்றால் இவளை அழைத்து செல்லமாட்டார்கள்.
ஒருமுறை திருவிழாவுக்கு அழைத்து சென்ற போது ஊர்மக்கள் அனைவரும் அவள் பெற்றோர் முன்னிலையில் இந்த விதவை பெண் அதிர்ஷ்ட கட்டை இவள் ராசியால் கணவரை இழந்தவள் இவளை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என்று தவறுதலாக மனது வலிக்கும் படி நேரடியாகவே பேசினார்கள்............
இதை அந்த முன்னாள் நண்பனும் பார்த்துக் கொண்டு கண்ணீருடன் அவளை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து விட்டு சென்றான்.
கவலையடைந்த பெற்றொர் எந்த இடத்திற்கும் அவளை அழைத்து செல்ல மாட்டார்கள், அவளும் வெளியில் போக விரும்பமாட்டாள்.
ஒருநாள் இந்த பெண்ணின் நெருங்கிய தோழி வயதுக்கு வந்து விட்டாள் அவள் வீட்டில் விசேஷம் என்பதால் தோழியின் பெற்றோரும் தோழியும் இவளை விரும்பி அழைத்தனர்........!
எவ்வளவோ? மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை!
இந்த பெண்ணும் வேறு வழியின்றி சென்றாள்.
அங்கு சென்றது இவள் பெற்றோர் இவளை தனியே ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு உள்ளே சென்றனர்.....
அப்பொழுது அங்கு வந்த இவளின் சிறு வயது தோழன் இவளைப்பார்த்து சிரித்து விட்டு! ஒரு சிறு பேப்பரில் ஏதோ எழுதி அவளிடம் போட்டு விட்டு சென்றான்.
அந்த பேப்பரை எடுத்தவள் பிரித்து பார்த்தாள் என்னவோ எழுதியிருந்தது என்னவென்று தெரியவில்லை??????
காரணம் இவளுக்கு படிக்கத்தெரியாது!
வீட்டில் யாரிடமும் கேட்கவில்லை தோழியரிடம் கேட்டாலும் அதில் ஏதாவது தவறுதலாக எழுதியிருந்தால் ஊருக்கும், நமக்கும், அந்த பையனுக்கும் தான் பிரச்சனை......
அதனால் யாரிடமும் கேட்காமல் அப்படியே வைத்துவிட்டாள்...!
அப்பாவிடம் சென்று படிக்க வையுங்கள் என்று கெஞ்சினாள்.
அப்பாவோ! மறுத்தார் விதவைப்பெண் என்று கிண்டலடிப்பார்கள் என்று சொன்னார்..
உடனே அவள் அன்று முதல் எதுவும் சாப்பிடாமல் மூலையில் போய் கிடந்தாள்.....
பலவருடங்கள் முடங்கிக்கிடந்தவள் தான் வெளியில் சென்று சம்பாதித்து ஒரு நிலையை அடைந்ததும் கல்வி கற்க ஆரம்பித்தாள்.......!
எழுத்தும் புரிதலும் குறைவாக இருந்தது எப்படியோ கஷ்டப்பட்டு தனது படிப்பை முடித்தவள்......
ஒருநாள் திடீரென அந்த சிறுவன் கொடுத்த கடிதத்தை தேடி எடுத்து படித்தாள்,,,,,,,,
படித்தவளுக்கு கண்கள் முழுவது கண்ணீர்???????
அந்த கடிதத்தில் "எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது, என்னைப்பிடித்திருந்தால் நாளை மாலை6 மணிக்குள் உன் பதிலை சொல் உனக்காக ஆற்றங்கரையில் காத்திருப்பேன் என்று அன்புடன் உன்......" என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.
படிப்பறிவு இல்லாத ஒரே காரணத்திற்காக நம் இல்லற வாழ்க்கையே தொலைத்து விட்டோமே? என்று அந்த பெண் துடித்து அழுதாள்....இன்று வரை அழுது கொண்டிருக்கிறாள்.....
என்று கூறி பேராசிரியை உமா கதையை முடித்தார்.
முடித்த கணம் மாணவர்களை நிமிர்ந்து பார்த்தார்.
அனைத்து மாணவர்கள் கண்களிலும் கண்ணீர் கடலளவு நிரம்பியிருந்தது.......!
கண்களை துடைத்துக்கொண்ட மாணவர்கள்.. மேடம் அந்த பெண் யாரென்று? சொல்லுங்கள்? எங்களுக்கு அவர்களை பார்க்க ஆவலாக இருக்கிறது என்று கேட்டனர்..........
தன் கையால் கண்ணீரை துடைத்துக்கொண்ட ஆசிரியை உமா "நான்தான் அன்றைய படிபறிவில்லா பெண்" என்று பதிலளித்தார்.
மாணவர்கள் அதிர்ச்சியோடு அவரைப்பார்க்க மதிய இடைவேளைக்கான பெல் அடித்தது அனைவரும் கலைந்தனர்.............!
குறிப்பு:(பேராசிரியையின் இயற்பெயர் கல்கி அவர்களுடைய சிறுவயது காதல் மற்றும் அவர்கள் கல்வியின் மீது கொண்ட காதலை வைத்துதான் அமைத்துள்ளேன்)