எதிரொலி மிக வலி - வானொலி நாடகம் - மணியன்

வேணு. . சான்ஸே இல்லடா. . பீச்சு பீச்சுதான்டா. அய்யோ. . கலர் கலரா. . . என்னா சூப்பருடா. . .

ஆமான்டா. . . ரவி. . படிப்பு என்னடா பெரிய படிப்பு. ஆண்டவன் படைப்பைப் பாருடா. . என்னமா செதுக்கி செதுக்கி ஒவ்வொரு பிகரையும் படைச்சிருக்கான் பாருடா. . . .

உண்மைதான்டா. . . கடலுக்கு வந்து கடலை இல்லைன்னா எப்படி. . . சுண்டல் சாப்பிடலாம். . ஏய் பாப்பா. . . சுண்டல். . .இங்க வா. . .

என்னங்கண்ணா. . . சுண்டல் வேணுமா. . எத்தனை பொட்டலம் வேணும். ஆளுக்கொண்ணு தரட்டுமா. . . .

ஆளுக்கொண்ணு தரப்போறியா. . . ஆஹா . குடு . . . குடு. . .

என்னண்ணா நீங்க தப்பு தப்பா பேசுறீங்க. . . நான் சுண்டல் ஆளுக்கொரு பொட்டலம் தரட்டுமான்னு கேட்டேன். . . .

ஓஹோ. . அப்படியா. . . பயபுள்ள மனசு என்னமா ஆசைப் படுது பாரு. . . இந்த சின்ன வயசுலயே இப்படி கும்முனு இருக்கியே. . .வீட்டுல அக்கா யாரும் இருக்காங்களா. . .

சுண்டல் எத்தனைப் பொட்டலம் வேணும் சொல்லுங்கண்ணா. . . .

சுண்டாமலே செவ செவன்னு இருக்கியே. உங்க அக்கா உன்னை விட டாப்பா இருப்பாளா. . .

விளையாடாதீங்கண்ணா. . நான் இன்னும் போணி கூட பண்ணல. . . எத்தனை பொட்டலம் வேணும் சொல்லுங்கண்ணா. . . .

டேய். . மச்சி. . பாப்பாவுக்கு இன்னும் போணி ஆகலையாமடா. . . . உங்க அக்கா இருந்தால் வரச்சொல்லு பாப்பா. . . போணி பண்ணிப் பார்த்துடலாம். . .

அண்ணா. . . என்னண்ணா. . எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது. . சுண்டல் வேணுமா வேண்டாமாண்ணா. . நான் கிளம்பனும். .

சரி. . . .சரி. . . அழுவாதே. . . இப்படி அழுகாச்சிப் புள்ளகிட்ட எல்லாம் சுண்டல் வாங்க முடியாது. . நீ இடத்தை காலி பண்ணு. .

டேய் . . . பாவமடா. . . ஒரே ஒரு பொட்டலமாவது வாங்கி இருக்கலாம். இப்படி அத்த பாப்பா அழுவுறது என் மனசே தாங்கல. . .

இதைப் பாருடா. . . பொம்பளைங்க அழுதால்தான் மாப்பிளைக்கு மனசு தாங்காது. . இது வெடக்குஞ்சுதான் மச்சான். . சரி. . சரி. .
நேரம் ஆயிடுச்சு கிளம்பலாம். அம்மா திட்ட ஆரம்பிச்சிடுவாங்க நான் கிளம்புறேன். . பை. பை.
அம்மா. . . அம்மா. . .

ஏன்டா கத்துறே. . இதோ வந்துட்டேன். .

காலிங் பெல்லை எவ்வளவு நேரமா அடிக்கிறேன். கதவை திறக்க இவ்வளவு நேரமா. . . ஏன் கீதா என்ன பண்ணுகிறா. . . காலேஜில இருந்து வந்துட்டாளா இல்லையா. . .

வந்துட்டா. . . வந்துட்டா. . வந்ததும் வராததுமா அவ ரூமுக்குள்ளப் போனவதான். . வெளியே வரவே இல்லை. போய் என்னான்னு கேளு. . ஸ்டவ்வுல பால் வச்சேன்.என்னாச்சோ போய் பார்க்கிறேன்.

கீதா. . கீதா. . . .

(: (: (: (: (:

ஏய் கீதா. . ஏன்டி இப்படி உம்முனு இருக்கே. கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. முகமும் வீங்கியிருக்கு. . என்னம்மா ஆச்சு. . .

நான் இனிமேல் காலைஜுக்குக் போக மாட்டேன்.

இன்னைக்கும்தான் முதல்நாள் காலேஜ் போனே. அதுக்குள்ள போக மாட்டேன்னு சொன்னா எப்படி என்னன்னு சொல்லு. . .

காலைஜுல பசங்க கெட்ட வார்த்தை பேசி கேலி பண்ணுறானுங்க. . நீ இப்படி சூப்பரா இருக்கியே. உங்க அம்மா உன்னை விட டக்கரா இருப்பாளோ. உன்னக் கட்டிக்கப் போறவனோட மவராசன் ------
அப்படி இப்படின்னு கெட்ட கெட்ட வார்த்தை பேசுறானுங்க. . தலை முடியை பிடிச்சு இழுக்கிறானுவ. . . நான் இனி காலேஜுக்குப் போக மாட்டேண்ணா. எனக்குப் பயமாயிருக்கு. . .

! ? ! ? ! ?

என்னண்ணா. . நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.நீ இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்குறியே. .
அண்ண்ண்ணா. . . .அண்ண்ண்ணா. . .அம்மா இங்க வாயேன் அண்ணன் என்னவோ போல ஆயிட்டான். . . அம்ம்ம்மா. . . அம்ம்ம்மா. . . .



*-*-*-*-*-* *-*-*-*-** *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (29-Mar-14, 2:15 pm)
பார்வை : 243

மேலே