இப்படிக்கு குப்பைத் தொட்டி

இப்படிக்கு குப்பைதொட்டி....

நானும்
பாக்கியவானே
உங்கள் குப்பைகளை
சுமப்பதால்
நானின்றி போனால்
ஏது உங்கள்
சுகாதாரம்

தெருநாய்களுக்கு
அன்னதான கூடம்
சில வேளைகளில்
மனிதர்களுக்கும்

என்னை நிரப்ப நிரப்ப
சந்தோசமே
சிலருக்கு சோறவதால்....

சில நேரம்
மரத்தே போகிறேன்
குப்பையாய்
குழந்தையை வீசயில்

நீங்கள்
என்னை மட்டுமன்று
என்னை சுத்தம் செய்பவரையும்
தீண்டாதகாதவராய்
பார்க்கிறிர் .....
அவனின்றி
இங்கு ஏது சுத்தம்

உம்மிடம் கேட்பது
இரண்டு
என்னுள் கொட்டுங்கள்
ஊரெல்லாம் இல்லை
பிரித்தே
கொட்டுங்கள்
மக்கும் மக்காயென்று
சில நேரம் பிளாஸ்டிக்கால்
முச்சடைத்து போகிறேன்

கொட்டுங்கள்
கொட்டுங்கள்
நிரம்பி வழிந்தாலும்
சந்தோசமே

இப்படிக்கு
குப்பைத்தொட்டி

பாண்டிய இளவல்( மது. க)

எழுதியவர் : பாண்டிய இளவல் ( மது.க) (30-Mar-14, 12:19 am)
பார்வை : 53

மேலே