சுவாசித்த மண்ணின் வாசம் தொலைத்து
சுவாசித்த மண்ணின்
வாசம் தொலைத்து
நகரம் நோக்கி நகர்ந்த
நரக நாட்களின்
வேரறுந்த
வெறுமை தீர்க்க
என் கால் நனைத்து
விரலிடுக்கில்
மண் அரித்து
மனம் லேசாக்கி
சென்ற திரை
ஆவேசமாய்
அசுரக் கை கொண்டு
மாரிலடித்து அழுதது
திரைகளுக்கப்பால்
திண்டாடும் எம்
உறவினம் சொல்லி !
கண்ணில் கடல் தேக்கி
வெறுமை உள் நிறைத்து
வெறும் கூடாய்
நடந்தேன் நான்!