பெண் பூக்கள்
பல வர்ணப் .....
பூணுல் அணிந்த ......
பட்டாம் பூச்சி
புல்வெளியில் ...
மந்திரம் ஓதும் .......
பூவின் காதுகளில் ....
அதன் தேன் எடுக்கும் ...
தந்திரம் அறியா ..
அப்பாவிப் பூ .........
மந்திர மயக்கத்தில் ...
தேன் கொடுத்து ....
கற்பிழக்கும் .........
பட்டமாய்ப்
பறந்துவிடும் ......
பட்டாம் பூச்சி
மந்திரம் ஓத ....
இன்னுமொரு
பூத் தேடி
கற்பழித்தவன் ...........
வருகைக்காய் ....
காத்திருந்து
பூத்திருந்து ......
பரிதாபமாய் ....
உதிர்ந்து ......
உயிர் விடும் ........
பாவிப் பூ ..........