பூமியிலே பூந்தோட்டம் நீதானோ - நேரிசை வெண்பாக்கள் 13

கைப்பற்றி யுள்ளதைப் போட்டனர் பங்கு!

துப்பின்றித் யாரும் திருடத் துணியாரே!
தப்பான நேரத்தில் தேட்டையோ? - ஒப்புக்குக்
கள்ளனைத் தேடினர் காவலர்! கைப்பற்றி
யுள்ளதைப் போட்டனர் பங்கு! 1

பூமியிலே பூந்தோட்டம் நீதானோ!

புன்னகைக்கு பூமியிலே பூந்தோட்டம் நீதானோ
பொன்னகைக்கு மேல்சிறப்பு புன்னகைதான் - அன்றோநல்
அன்னை மடிமழலைப் புன்னகையோ ஆனந்தம்
இன்னுமென்ன பெண்ணே இயம்பு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-14, 8:39 am)
பார்வை : 151

மேலே