தீவந்து மூழட்டும்

புகையெழுந்த தேசமதில்
புன்னகை என்று விரியுமோ
பலிகொடுத்த நாட்டினிலே-நான்
விடுதலைப் பாட்டெழுத கூடுமோ?

வீதியெங்கும் நடக்கிறேன்
விடுதலைத் தீயினைச் சுமக்கிறேன்
அன்னைமண் விடுந்திடுமே என்று
நாளுமே ஏங்கித் தவிக்கிறேன்

அடுத்தவன் தேசமதில் பிறந்துமே
அன்னைமண் மறந்துமே வாழுகிறாய்
உனை நினைத்துமே-எந்தன்
நெஞ்சினில் வலியினால் நோகுகிறேன்

வீடு இடித்த காடையர்கள்
வீதியெங்கும் சிரிக்கின்றனரே
வீட்டுச்சின்ன பாவியர் சிலர்
விடுதலை நெருப்பினை அணைக்கின்றரே

ஈனப்பயல் இராணுவந்தான்
ஈழமண்ணில் அலைக்கின்றதே
வீட்டுக்குள்ளே நாமிருந்து
உண்டு களித்து உறங்குவதோ?

சர்வதேசம் வந்து எம்மைவைத்து
சந்தை செய்ய உலாவுகின்றதே
சுடுகாட்டின் மீதர்மந்து
வியாபாரம் செய்யத் துடிக்கின்றதே

ஒற்றுமையின் பலனறியா
ஒவ்வொரு தேசமாய் திரிகின்றோம்
ஒவ்வொரு குழுக்களாய்
நமக்குள் அடித்துமே சாகின்றோம்

இனக்கோரமதை பார்த்துமே
இன்னுமே நாம் திருந்தவில்லை
மக்கள் புரட்சி என்றவனின்
பசியினை நாம் தீர்க்கவில்லை

சோகம்தனை எம்மீது உமிழ்ந்துமே
துடைந்தெறிய வக்கற்று நிற்கின்றோம்
எதிரி சூடுகள் போட்டுமே
சுரணையற்று நாம் கிடக்கின்றோம்

ஆண்டுக்கொருமுறை கூடிநின்று
தீபமதை ஏற்றுகிறோம்
முடிந்தவுடன் அணைத்துவிட்டு
மறைந்துவிட்டு செல்கிறோம்

நெஞ்சினிலே போரிடும்
தீவந்து மூழட்டுமே
ஒன்றுபட்டு மீண்டெழுந்தால்
விடுதலை விரைவில் கிடைத்திடுமே

தொப்புள்கொடி உறவுகளே
துடித்தெழுந்து வாருங்களேன்
புலத்திலுள்ள புண்ணியர்களே
வீதிவந்து முழங்குகளேன்

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (31-Mar-14, 11:43 am)
பார்வை : 199

மேலே