நெஞ்சத் தகிப்பு
பொய்யும் புரட்டோடும் பொல்லாக் கதையோடும்
கைகளின்மேல் கட்சியதன் கோட்பாட்டுச்- செய்தியோடும்
எங்கும் தெருத்தெருவாய் என்பக்கம் நிற்போரோ
மங்கிப்போ வாரே மறைந்து.
போராட் டமென்றேப் புறப்பட்ட எம்மோரை
வேரோடு சாய்த்த வெறியாலே-நீரோடும்
கண்ணின் நிலைமைக்குக் காலம் பதில்தந்தால்
தண்கொள்ளும் நெஞ்சத் தகிப்பு.

