கல்லறையில் தேடுகிறேன் என் அம்மாவை
சித்திரமே உனை பெற்றெடுக்க
நான் பெற்றுவந்தேன் குழந்தை வரம்
பத்திரமாய் மிக பத்திரமாய்
என் கருவறையில் உன்னை காத்திடுவேன்
சேர்த்துவைத்த என் புன்னகை யாவும்
உனக்காக நான் பரிசளிப்பேன்
வறுமையில் அம்மா வாடுகிறேன்-என்று
உந்தன் உள்ளம் அறியாமல்
சிட்டிகை அளவு உணவாயினும்
உனக்களித்து நான் பசி மறப்பேன்
சொந்தம் யாரும் இல்லையென்று
நினைத்தவள் இன்று உன்னைக் கண்டு
ஆயிரம் சொந்தம் கொண்டவளாய்
முகத்தை நிறைப்பால் புன்னகையால்
பத்தே மாதம் காத்திருந்து
உன்னை பத்திரமாய் பெற்றெடுப்பேன்
10 மாதத்திற்கு பின்பு
என் அழுகை குரலை
கேட்க்க மறந்து
என் அம்மா எங்கே போனாலோ
இந்த அழுகை என்றும் வாழ்வில் தொடர
என்னை விட்டுப் போனாலோ
சிட்டிகையளவு உணவளிக்காமல்-இன்று
என்னை பட்டினி போட்டாயே
என் அம்மா இல்லா உலகத்திலே
என்னை அனாதை என்று அழைப்பாரோ
இல்லை எட்டி உதைத்து மிதிப்பாரோ
கருவறை பிரிந்து கல்லறையில்
தேடுகிறேன் என் அம்மாவை
"பிழை இருந்தால் மன்னிக்கவும்
சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்"