சில சொட்டுக்கள் 0தாரகை0

நம்பிக்கை வையுங்கள்!

அரசியல்வாதிகளின் மீதும்
அதிகாரிகளின் மீதும் அல்ல.
அகிலத்தை படைத்த ஆண்டவன் மீது!

தலை வணங்குங்கள்!

தலைவர்களுக்கும்
தலைகனம் கொண்டோர்க்கும் அல்ல.
தரணியின் தலைவன் இறைவனுக்கு!

கட்டுப்படுங்கள்!

மனோ இச்சைகளுக்கும்
மானக்கேடான செயல்களுக்கும் அல்ல.
மகத்துவமிக்க சட்டத்திற்கு!

வாரி வழங்குங்கள்!

உங்கள் உறவுக்கு மட்டும்
உங்கள் தலைமுறைக்கு மட்டும் அல்ல.
கை ஏந்தி வரும் வறியோருக்கும்
கௌரவம் காத்து கை ஏந்தாதவருக்கும்!

சமத்துவம் பேணுங்கள்!

பணக்காரனோடும்
படித்தவனோடும் மட்டும் அல்ல.
ஆண்டான் அடிமை பேதம் இன்றி
அனைவரும் இறைவன் முன்சமமென்று!

எழுதியவர் : தாரகை (1-Apr-14, 11:38 pm)
பார்வை : 200

மேலே